எங்களது திரைப்படங்களில் கீழ்க்கண்ட மொழிகளில் வசனங்கள் தரப்பட்டுள்ளன: ஆங்கிலம், துருக்க மொழி, ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ்,இத்தாலியன், தமிழ், ஹிந்தி மற்றும் எளிய சீன மொழி. உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்க, யூ-ட்யூப் பிளேயரில் உள்ள வசனங்கள் மெனுவை கிளிக் செய்யவும்
இந்த இலவச ஆன்லைன் கல்வி முறை ப்ரேசில், சிலி, தொழில் மற்றும் கிராமப்புற சைனா, இங்கிலாந்து, இந்தியா, இத்தாலி, ட்ரினிடாட் மற்றும் துருக்கியின் துறை தளங்களில் 15 மாதங்களைக் கழித்த 9 மானிடவியலாளர்கள் ஒவ்வொருவரின் உழைப்பை ஆதாரமாகக் கொண்டது.
இந்தக் கல்வி முறை அந்த தளங்களின் திறன்களை மட்டுமல்லாமல், அங்கு இடப்பட்ட உள்ளடக்கங்களைப் பற்றியும் கவனம் செலுத்தக் கூடிய சமூக ஊடங்களைப் பற்றிய ஒரு புதிய வரையறையைக் கொடுக்கக் கூடியது. அது தொடர்புகள் சார்ந்த படங்களைப் பற்றியும், மக்கள் மிமி, செல்ஃபி மற்றும் புகைப்படங்களை போஸ்ட் செய்யும் காரணங்கள் பற்றியும் ஆய்வு செய்கிறது.
சமூக ஊடகங்களின் விளைவுகள் யாவை?
ஐந்து வாரங்களில் நீங்கள், அரசியல், கல்வி, பாலினம், வணிகம், தனிமை, சமத்துவம் ஆகியவை உள்ளடங்கிய பரந்த தலைப்புகளின் சமூக ஊடகங்களின் தாக்கத்தைப் பற்றி ஆராய்வீர்கள். சமூக ஊடகங்களின் விளைவுகள் இடத்திற்கு இடம் வேறு படுவதையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்..
சமூக ஊடகங்களைப் பற்றிய ஒரு ஒப்பீட்டு மற்றும் மானுடவியல் அணுகுமுறையைக் கையாள்க.
இந்தக் கல்வியானது சுய களவேலையை மேற்கொண்டு, அந்த ஆராய்ச்சியைப் பற்றிய பதினொன்று புத்தகங்களை வெளியிடும் ஒன்பது மானிடவியலாளர்களாலேயே கற்பிக்கப்படும்.
நீங்கள் எங்களுடைய பல தகவல் கொடுப்போர்களை படங்களின் மூலம் சந்திப்பீர்கள், விவாதங்கள் மற்றும் விரிவுரைகள் மூலம் எங்கள் அணியில் ஈடுபடுவீர்கள், அனிமேஷன் , இன்போகிராபிக்ஸ் மற்றும் நூல்கள் மூலம் எங்கள் கருத்துக்களை சந்திப்பீர்கள்.
ஒப்பீட்டு மற்றும் மானுடவியல் அணுகுமுறையைக் கையாள்வதின் மூலம், நாம் சமூக ஊடகங்கள் உலகத்தை எவ்வாறு மாற்றியுள்ளன என்பது மட்டுமல்லாமல், உலகம் சமூக ஊடகங்களை எவ்வாறு மாற்றியுள்ளது என்பதை அறிந்து கொள்ள விழைகிறோம்.
இதற்கு ஒரே ஒரு தேவை சமூக ஊடகங்கள் மற்றும் மக்களின் மேல் உங்களுக்கு உள்ள ஆர்வம்தான்

இந்தக் கல்வி சமூக ஊடகங்களின் தாக்கங்களைப் பற்றிய உலகளாவிய ஆய்வை நடத்திய ஒன்பது மானுடவியலாளர்களால் கற்பிக்கப் படும். இந்த திட்டம், யூனிவர்சிடி காலேஜ் ஆஃப் லண்டனின் மானுடவியல் துறையை இருப்பிடமாகக் கொண்டுள்ளது.
டாம் மெக்டொனால்ட், யூ சி எல் (கிராமப்புற சைனா) @anthrotom
டேனியல் மில்லர், யூ சி எல் (இங்கிலாந்து) @DannyAnth
சின்யுவான் வாங், யூ சி எல் (தொழில்புற சைனா) @amberwanguk
ஸ்ரீராம் வெங்கட்ராமன், யூ சி எல் (தென் இந்தியா)
எலிசபெத் கோஸ்டா, யூ சி எல் (தென்கிழக்கு துருக்கி)
நெல் ஹேயின்ஸ், பான்டிஃபிகா யூனிவர்சிடாட் கடோலிகா டி சிலி (வடக்கு சிலி) @doctoraluchador
ராஸ்வான் நிகோலேஸ்க்யூ, யூ சி எல் (தென்கிழக்கு இட்டாலி) @razvanni
ஜோலின்னா சின்னனான், யூ சி எல் (ட்ரினிடாட்) @jolynnasinanan
ஜூலியானோ ஸ்பையர், யூ சி எல் (பிரேசில்) @jasper